இந்து மதமும் இந்திய சுதந்திரமும்



இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட வரலாறு...  மறைக்கப்பட்ட வரலாறு.... 1947 ஆகஸ்டு 15 நாம் எப்படி சுதந்திரம் பெற்றோம். மௌண்ட் பேட்டன், நேருவை அழைத்து, உங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கப் போகிறோம் அதை எப்படிக் கொடுப்பது என்று கேட்க, நேருவுக்கு குழப்பமாக இருந்தது. எதை அடையாளமாக வைத்து சுதந்திரத்தைப் பெறுவது.....
(பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கியது என்பதற்கு எந்த சாசனமும் இல்லை).
உடனே நேரு மூதறிஞர் ராஜாஜியை அணுகி, "எனக்கு இந்த நடைமுறைகள் தெரியாது, அதனால் தாங்கள் தான் தீர்வு கூற வேண்டும்" என்று கூற, உடனே ராஜாஜி "கவலை வேண்டாம், எங்கள் தமிழகத்தில் மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, ராஜகுருவாக இருப்பவர், செங்கோலைப் புதிய மன்னருக்குக் கொடுத்து, ஆட்சி மாற்றம் செய்வர். நாமும் அன்னியன் கையால் சுதந்திரம் பெறுவதை விட, குரு மகானின் கையால் செங்கோலைப் பெற்று ஆட்சி மாற்றம் அடையலாம்", என்றார்.
நேருவும் "நேரம் குறைவாக உள்ளது.. உடனே ஏற்பாட்டை செய்யுங்கள்", என்று உத்தரவிட்டார்.

ராஜாஜி உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்ல, அப்போது கடும் காய்ச்சலில் இருந்த ஆதீனம் அவர்கள், உடனே முறையாக செங்கோல் தயாரித்து, தங்க முலாம் பூசி, இளைய ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகளிடம் பொறுப்பை ஒப்படைத்து, கூடவே ஓதுவார் மூர்த்திகளையும் உடன் அனுப்பி வைத்தார். (தேவாரத்தில் இருந்து கோளறு பதிகம் பதினோரு பாடல்களை குறித்துக் கொடுத்தார்--இந்த பாடல்களை அப்போது ஓதுவார் மூர்த்திகள் பாட வேண்டும்).
ராஜாஜி அனுப்பிய தனி விமானத்தில் அவர்கள் செங்கோலுடன் டில்லி போய் சேர்ந்தனர். அப்போது ஆயிரம் ஆண்டு அடிமைத் தளையில் இருந்து, பாரதத்தின் விடுதலை பெறும் விழாவிற்காக எல்லோரும் காத்திருந்தனர்.
அந்த சுதந்திர வைபவ தினத்தில் மௌண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலை குரு மகா சன்னிதானம் திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகள் பெற்று, செங்கோலுக்கு புனித நீர் தெளித்து, ஓதுவார் மூர்த்திகள், வேயிறு தோளிபங்கன் என்று துவங்குகிற தேவார திருப்பதிகத்தைப் பாட, பதினோராவது பாடலின் கடைசி வரி,
"அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே"
இந்த வரியைப் பாடி முடிக்கும் போது தான், சுவாமிகள் செங்கோலை நேருவிடத்தில் கொடுத்தார்.

அந்த நிகழ்வைத் தான் நாம் சுதந்திர தினமாகக் கொண்டாடுகிறோம். இந்த நிகழ்வு தமிழுக்கும் தமிழகத்திற்கும் எவ்வளவு பெருமை.  இந்த வரலாற்று விஷயத்தை பாடப் புத்தகத்தில் வெளியிட்டு, நாடறிய செய்யாமல் சதி செய்யப்பட்டது. நண்பர்களே இவ்வளவு பெருமை வாய்ந்த செய்தியை நாடறியச் செய்வோம்.

திருவாவடுதுறை ஆதீன மடத்தில், இந்த செங்கோல் வைபவம், கருப்பு வெள்ளை புகைப்படமாக உள்ளது. புகைப்படத்தில் 15.8.1947 என்று தேதியிட்டு இருப்பதையும், நேரு, கையில் செங்கோலுடன் இருப்பதையும், தம்பிரான் பண்டார ஸ்வாமிகள் அருகில் உள்ளதையும் காணுங்கள்.

அன்புடன்

ப  விநாயகம் 

Comments

Popular posts from this blog

HISTORY OF COMPUTER DATA STORAGE A STAGE BY STAGE PICTORIAL PRESENTATION

Inspired and visited Hindu temple by Me and My friends in and around Kumbakonam- Aduthurai

Gandhi Age is the Dark Age of India