“ஒரு சாமான்ய நடிகன் இந்திய திரையுலகின் சக்ரவர்த்தியான அதிசயம்!” பிரபல மலையாள நாளிதழில் வெளியான முழுபக்க கட்டுரை!




— பாலசந்திர மேனன்.

“வெற்றிகள் பல குவித்த போர்க் குதிரைகளை பின்தள்ளிவிட்டு, தமிழ் நாடு கடந்து, இந்தியா தாண்டி, உலக அரங்கில் ரஜினிகாந்த் என்னும் ‘இண்டர்னெஷினல் ஸ்டார்’ ராஜ கம்பீர குதிரையாக வெற்றிக்களிப்பில் ஒடிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில், 30 வருடங்களுக்கு முந்தைய சிவாஜி ராவ் என்னும் நொண்டிக் குதிரயை பற்றி பாலசந்திர மேனன் திரும்பி பார்கிறார்.….”

நான் இப்பொழுது எழுதுவது ஒரு அனுபவக் குறிப்பு. ஏனக்கோ, இதில் நான் எழுதும் நபருக்கோ எந்த விதமான வியாபார உறவும் தற்பொழுது இல்லை.  என் நினைவில் நிற்கும் சில கடந்தகால நிகழ்சிகள் தான் என்னை இக்கட்டுரையை எழுத தூண்டியது. அந்த நினைவில் உள்ள நிகழ்சிகளின் மூலமாக என்னை பிரமிப்பில் ஆழ்த்தும் விதியின் வலிமையை நான் கண்முன்னே காண்கிறேன். நயம் மிகுந்த அந்த கதையின் காட்சிகளை என்னோடு சேர்ந்து கண்டுகளிக்க இக் கட்டுரையின் வாசிப்பாளர்களை அழைக்கிறேன். இக் கதையின் கதாநாயகன் இன்று உலகெங்கும் உள்ள மக்களின் உள்ளம் கவர்ந்த சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.
ஒரே ஒரு ஷோவில், பால்கனி இருக்கைகள் மட்டும் நிரம்பி விட்டால், சுப்பர் ஸ்டார் என்னும் சங்கிலியை கழுத்தில் தொங்கவிட்டு பறைசாற்றிக் கொள்ளும் நடிகர்கள் உள்ள இந்தக் காலத்தில், இதோ எந்திரன் என்னும் திரைப்படம் இந்தியா மட்டும் அல்லாது உலகம் முழுவதும் 2200 ஷோக்கள் ஒவ்வொரு நாளும் வெற்றிகரமாக ஒடிக்கொண்டு இருக்கிறது.
அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் கண்களை பயமுறுத்தும் ரஜினிகாந்தின் வின்னைத்தொடும் கட் அவுட்டுகள் இந்தியாவின் பெருமையின் இலக்கணமாக காட்சியளிக்கின்றன. மலையாள சினிமாவின் வரலாற்றில், திருவனந்தபுரம் நகரில் ஒரே நேரத்தில் 5 திரையரங்குகளில் ஒடும் முதல் திரைப்படம் என்ற பெருமையயும் இந்த ஏந்திரன் திரைப்படம் பெற்றுள்ளது. இந்த எந்திரனின் மந்திரத்தை முதல் நாள் அன்றே தரிசிக்க 1000 ருபாய் கொடுத்து பிளாக்கில் டிக்கெட் எடுக்க சென்னையில் இளைஞர்கள் கூட்டம் அலைமோதும் அதே சமயம், அமெரிக்காவில் ஒரு டிக்கெட் 40 டாலர் என்னும் விலையில் விற்றுத்தீருகின்றனவாம்.

பல வருடங்களுக்கு முன்பு நான் பழகிய ஒரு மனிதர் இந்திய சினிமா என்னும் குண்டுசட்டியையும் தாண்டி புகழ்பெருவதைக்கண்டு என் மனம் மகிழ்சியில் பூரிப்படைகிறது. தன்னொடு முன்னொரு நாள் தனிமையில் பயனித்த ஒரு மனிதர் பகவான் யேசுநாதர் என்று தெரிந்தால் சாதாரண ஒரு கிறுஸ்து பக்தன் எவ்வளவு மகிழ்ச்சியடைவானோ, நான் அந்த அளவு மகிழ்கிறேன்.
இன்றிலிருந்து எறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன் இந்த நபரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் மறைந்த நடிகர் ஸ்ரீநாத் ஆவார். ஸ்ரீநாத்தை தவிர (மலையாள நடிகர்கள்) கைலாஷ்நாத், ஆடம், அயுப், ஸ்ரீனிவாசன், ஜேம்ஸ் முதலியவர்களும் சென்னையின் சினிமாக் கல்லூரியின் மாணவர்கள் ஆயிருந்தனர். என்னை அவருக்கு அறிமுகப்படுத்தியபோது, ரஜினி என்னிடம் வந்து “சார், நான் ஃபிலிம் இன்ஸ்டிடுடில் நடிப்புக் கலை படிக்கிறேன்.” என்று கூறினார். பிறகு, ஒரு சிகரெட்டை எடுத்து அனாயாசமாக வானத்தில் போட்டு உதட்டில் பிடித்து, ஒரு வெற்றிப் பார்வையுடன் என்னைப் பார்க்கிறார். அப்பொழுது தான் நான் அவரை கவனிக்கிறேன். கருப்பு நிறம், பரட்டைத் தலை, நீல பேண்ட், சிகப்புச் சட்டை, கையில் வெள்ளிக் காப்பு, அதிகமாக புகைப்பிடிப்பதின் விளைவாக பிளந்து இருந்த உதடுகள், கரை பிடித்த பல்லுகள் என்று இருந்தார். இதை எல்லாம் விட அவர் அடிக்கடி ஒரு வெற்றி முழக்கமிட்டார், அது தான் அவரது கனீர் சிரிப்பு, ஹா ஹா ஹா ஹா….
மொத்தத்தில் உன்மையை கூற வேண்டுமானால் அவரை எனக்கு அப்பொழுது பிடிக்கவில்லை. கர்நாடகாவில் பஸ் கண்டக்டராக இருந்து, சினிமா ஜுரத்தில் அகப்பட்டு கோடம்பாக்கம் வந்து வாழ்க்கை தேட வந்த இந்த இளைஞருக்கு பிழைக்க வேறு வழியே கிடைக்கவில்லையா என்று என் மனதில் தோன்றியது. இவர் வெற்றி பெருவது கடினம் என்று நினைத்தேன். சிவாஜி ராவ் என்னும் ரஜினிகாந்த் என்னுடைய அனுமானங்களை எல்லாம் உடைத்து எறிந்து, என் மன என்னங்களை பொய்யாக்கி மிகப் பெரும் பிம்பமாக இந்த ப்ரபஞ்சத்தில் வளர்ச்சி அடைந்த வரலாற்றின் மேல் நின்று தான் நான் இதை இன்று தெரிவிக்கின்றேன்.
145701710 640x424  “ஒரு சாமான்ய நடிகன் இந்திய திரையுலகின் சக்ரவர்த்தியான அதிசயம்!” பிரபல மலையாள நாளிதழில் வெளியான முழுபக்க கட்டுரை!
ஒரு பத்திரிக்கையாளனாக என்னுடைய சம்பளம் அப்பொழுது மிகவும் குறைவு தான். ஆயினும் ஞாயிறு தோறும் ‘வூட்லாண்ட்ஸ்’ ஹோட்டலின் ‘டிரைவ் இன்’ ரெஸ்டாரண்ட்டில் நாங்கள் கூடுவது வழக்கம். அங்கு எப்பொழுதும் ஒரு சினிமாக்கூட்டம் சுத்திக்கொண்டே இருக்கும். சினிமா எடுத்து புகழ் பெற விரும்பும் தயாரிப்பாளர்கள், படம் எடுத்து போண்டியானவர்கள், வாய்ப்பு தேடும் நடிகர் நடிகைகள், அழகிய இளம் பெண்கள், படப்பிடிப்பிற்காக வீடு வாடகைக்கு விடுபவர்கள் என அனைத்து தரப்பினரும் அங்கு நல்ல நண்பர்களாக உலா வருவோம்.
ஒவ்வொரு முறையும் சிவாஜி ராவை அங்கு கானும் போதும் ஹலோ என்றும், குட் மார்னிங் என்றும் கூறி ஒரு நல்ல நட்பை வளர்த்துக்கொண்டோம். ஒவ்வொரு முறையும் சிவாஜி ராவ் என்னும் அந்த நபர் கலர் கலராக கலக்கலான உடைகளில் வலம் வந்து ஒரு மாறுவேடப் போட்டியைக் கானும் ஆவலைத் தருவார். மேலும் ஒவ்வொரு முறையும் சிகரட்டை தூக்கிப் போட்டு வாயில் பிடித்து வழக்கம் போல அட்டகாசமாக சிரிப்பார், ஹ ஹா ஹா ஹா..!
அன்று மசாலா தோசை சாப்பிட வந்தவர், காக்கி அரைக்கால் சட்டை போட்ட சர்வர் சிறுவன் ஆவென வாயைப் பிளந்து பார்க்க, கட கடவென டீயைக் குடித்தார். அந்த சாதாரன சிவாஜி ராவ் இன்று பார் போற்றும் ரஜினிகாந்த்தாக வருவார் என்று யாரேனும் என்னி இருப்பார்களா?
காட்சி: ஒன்று
இடம்: டிரைவ் இன் ரெஸ்ட்டாரண்ட்
நேரம்: பகல்
கதாபாத்திரங்கள்: பத்திரிக்கையாளனாகிய பாலசந்திர மேனன், சிவாஜி ராவாகிய ரஜினிகாந்த்.
பரபரப்பான அந்த உணவு விடுதியில் ஒரு மூலையில் அமர்ந்து இருக்கும் பத்திரிக்கையாளனாகிய பாலசந்திர மேனனை நோக்கி வேகமாக கையில் ஒரு கவருடன் வருகிறார் ரஜினிகாந்த். வழக்கம்போல கலக்கலான உடை, அதற்க்கும் மேல் அதிகப்படியாக ஒரு கருப்புக் கண்ணாடி. கவரை பாலசந்திர மேனனை நோக்கி நீட்டிய படியே சிவாஜி ராவ் கூறுகிறார் “வணக்கம் சார். நீங்க ஒரு மலையாளப் பத்திரிக்கையின் நிருபர் என்று என் நண்பர்கள் கூறினார்கள். நீங்கள் நினைத்தால் இந்த கவரில் உள்ள என்னுடைய படம் கேரளாவில் உள்ள பத்திரிக்கையில் வரும். நான் மலையாளப் படங்களில் நடிக்க விரும்புகிறேன்” என்றார். மிக்க மகிழ்சியுடன் அந்த கவரைப் பெற்றுக் கொள்கிறார் பாலசந்திர மேனன், “என்னால் முடிந்ததை செய்கிறேன் என்று உறுதி கூறுகிறார்.
(காட்சி முடிவடைகிறது.)
ஆனால் அன்று என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. நான் கவரைப் பெற்றுக் கொண்ட அன்றே அதை ஆசிரியருக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அந்தப் படம் வெளியிடப்படாமல் களையப்பட்டது. ஓரு ஆசிரியருக்கும் நிருபருக்குமான உறவு என்பது மாமியார் மருமகள் உறவைப்போல ஆகும். நாங்கள் கொடுப்பதை முழுமையாக நிராகரிப்பதும், அல்லது சரியான நேரத்திற்க்குள் வெளியிடாமல் இருப்பதும், தலையும் இன்றி வாலும் இன்றி ஆட்டினை பன்றியாக மாற்றிப் வெளியிடுவதும் பத்திரிக்கை ஆசிரியர்களின் வழக்கம். இன்று வரும், நாளை வரும் என்று நிருபர் இருமாப்புடன் நடக்க, அது வெளிவரவில்லை எனில், அந்த செய்தி கொடுத்தவரைக் கானும் பொழுது ஒடி ஒளிய வேண்டிய கட்டாயமும் ஒரு நிருபரின் தலைஎழுத்தாகும்.  ரஜினியின் படம் வெளிவராததால் அவரிடம் கவர் வாங்கிய எனது நிலைமையும் அது தான்.
காட்சி: இரண்டு
இடம்: ஏ வி எம் ஸ்டுடியோ.
நேரம்: பகல்
கதாபாத்திரங்கள்: பத்திரிக்கையாளனாகிய பாலசந்திர மேனன், சிவாஜி ராவாகிய ரஜினிகாந்த்.
ஏ வி எம் ஸ்டுடியோவில் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டு இருக்கும் பத்திரிக்கையாளன் பாலசந்திர மேனன், திடீர் என்று ஒரு மாடியில் நடக்கும் பட பிடிப்பில் ஒரு மரத்தடியில் நான்கைந்து ஆண்களைப் போலீஸ் வேஷத்தில் காண்கிறார். அதில் ஒருவர் சிவாஜி ராவ்.
சிவாஜி ராவ், நேராக பத்திரிக்கையாளனை நோக்கி நடக்கிறார். அவரிடம் வந்தவுடன்,
சிவாஜி ராவ்: “வனக்கம் சார். அதுக்கு அப்புறம் ஆளயேக் காணோம், பத்திரிக்கையில் படத்தையும் காணோம்… ஹ ஹா ஹா ஹா…”
பத்திரிக்கையாளன்: “அன்று மாலையே அனுப்பி விட்டேன். சீக்கரம் வந்து விடும்”
சிவாஜி ராவ்: “அது பரவாயில்லை சார். அது வரம்போ வரட்டும் சார்.. வர்றது வராம இருக்காது. பாத்தீங்களா, நேத்தைக்கு வாய்ப்பு தேடிய நாங்க எல்லாம், இன்னைக்கு படத்தின் ஒரத்தில் இடத்தை மறைக்கும் நடிகர்களாக நடிக்கிறோம். இன்று வெறும் காண்ஸ்டபிள், நாளை ஏட்டு, நாளை மறுநாள் சப் இன்ஸ்பெக்டர்… அப்படி.. அப்படி. அப்படியே…. ஹ ஹா ஹா ஹா…”
அந்த சிரிப்பில் தெரிந்தது அவரின் மிகப் பெரிய தன்னம்பிக்கை.
(காட்சி முடிவடைகிறது.)
பிறகு சிறிது நாட்கள் நான் அவரைப் பார்க்கவில்லை. ஒரு நாள் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. பாலசந்தர் அவர்களின் இயக்கத்தில் நான் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படபிடிப்பு அடையாரில் உள்ள சத்யா ஸ்டுடியோவில் நாளை நடக்கிறது, நேரம் இருக்குமேயானால் நீங்கள் வந்தால் நல்லது பாலாஜி என்று அழைப்பு விட்டார். ஸ்ரீவித்யா அவர்கள் மரணம் வரையிலும் என்னை பாலாஜி என்று தான் அழைத்தார். நான் அப் படப்பிடிப்பிற்கு சென்றேன்.
காட்சி: மூன்று
இடம்: சத்யா ஸ்டுடியோ.
நேரம்: பகல்
கதாபாத்திரங்கள்: பத்திரிக்கையாளனாகிய பாலசந்திர மேனன், சிவாஜி ராவ், ஸ்ரீ வித்யா, கமலஹாசன், கே பாலசந்தர்.
லைட்கள் மற்றும் காமெராவின் முன் கமலஹாசன் மலர்ச்சியான முகத்தோடு நிற்கிறார். டைரெக்டர் கே பாலசந்தர் ‘கட்’ என்று சொன்னதும், அங்கே இருக்கும் போட்டோகிராப்பர்கள் கமலை படம் எடுத்து தள்ளுகிறார்கள், பூவை மொய்க்கும் வண்டுகளைப்போல்.
அவர்களிடம் இருந்து சற்று தூரத்தில் ஒரு நாற்காலியில் சிவாஜி ராவ். வழக்கமான கலர் சட்டைகள் இல்லை, கருப்புக் கண்ணாடி இல்லை, சிரிது வளர்ந்த தாடி, வாயில் சின்ன பீடி என அந்த திரைப்படத்தின் கதாபாத்திரம் அணியும் கலைந்த உடுப்புடன் அமைதியே உருவாக எந்த நட்சத்திர பந்தாவும் இல்லாமல் காட்சி அளிக்கிறார் சிவாஜி ராவ். தூரத்தில் கமலஹாசனை போட்டோகிராப்பர்கள் இப்போதும் மொய்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அழகான கூரிய கண்களையும், நாணத்தால் சினுங்கும் உதடுகளையும் தனதாய் உடைய ஸ்ரீ வித்யா வேகமாக வந்து நின்ற காரில் இருந்து கதவுகளை திறந்து வெளியே வர, அமர்ந்து இருந்த சிவாஜி ராவ், எழுந்து வணங்குகிறார். இது நடந்ததும் டைரெக்டர் கே பாலசந்தர் எதோ ஒரு திசையில் இருந்து ‘கட்’ என்று குரல் கொடுக்கிறார்.
(காட்சி முடிவடைகிறது.)
என்னைப் பார்ததும் சிவாஜி பரபரப்பானார். “வேண்டாம், வேண்டாம்.. அந்த போட்டோவை நினைத்து, என்னைப் பார்த்ததும் நீங்கள் மறைய வேண்டாம். அது வரும் பொழுது வரட்டும். நாம் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருக்கலாம்” என்று கூறினார். அவருக்குள் எங்கேயோ ஒரு தன்னம்பிக்கை மற்றும் அமைதியின் குரல் கேட்டது.
‘அபூர்வ ராகங்கள்’ என்னும் பாலசந்தர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தான் அது. அதில் ஸ்ரீ வித்யாவின் கணவராக ஒரு சின்ன வேடத்தில் நடிக்கிறார் சிவாஜி ராவ். ஆனால் ஒரு பெரிய ஹீரோவின் மூடில் இருந்தார் அவர்.
“சின்னது ஆனாலும் நல்ல வேஷம் சார். பாலசந்தர் சார் எனக்கு புதிய பேரும் தந்துள்ளார். ரஜினிகாந்த் என்பது தான் அது. இன்று முதல் நான் சிவாஜி ராவ் அல்ல, ரஜினிகாந்த், தாங்களும் இனி அவ்வாறே அழைக்க வேண்டும்.” என்று கூறினார்.
பாலசந்திர மேனன் “வேடம் சிரியது ஆனதினாலா போட்டோகிராப்பர்கள் உங்களை கண்டுகொள்ளவில்லை?” என்று கேட்க,
ரஜினிகாந்த் “சிரியது தானே சார் பெரியது ஆகிறது, அந்த பெரியது தானே சார் வளர்ந்து பிரம்மாண்டமாகிறது… ஹா ஹா ஹா ஹா……” என்று சிரித்தார்.
மீண்டும் அந்த பதிலில் அவரின் அமைதியும், தன்னம்பிக்கையும் தெரிந்தது. அவரிடத்தில் ஒரு தெய்வாம்சமும் தெரிந்தது. பிற்காலத்தில் அவர் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் சீடரானார் என்ற செய்தி கேட்டவுடன், இந்த நிகழ்ச்சிதான் என் நினைவுக்கு வந்தது.
அன்றைய சந்திப்பு முடிந்து நான் திரும்பியது ஸ்ரீ வித்யாவினுடைய காரில். அப்பொழுது என் மனதில் யாரும் கவனிக்காமல் தனித்து உட்காந்துகொண்டு இருந்த ரஜினியின் முகம் நிழலாடியது. ஸ்ரீ வித்யாவிடம் நான் “அனைவரும் கமலின் பின்னால் மொய்த்துக்கொண்டு புதுமுகமான ரஜினியைத் தனியாக கவனிக்காமல் இருப்பது சரியாகுமா” என்றேன். அதற்கு அவர், “அதெல்லாம் ஒன்றும் இல்லை பாலாஜி, பார்துக்கொண்டே இருங்கள், நாளைய சூப்பர் ஸ்டார் ரஜினிதான்” என்றார்.
ரஜினியின் பெயருடன் ‘சூப்பர் ஸ்டார்’ என்னும் பட்டத்தை நான் முதன் முதலாக கேட்டது ஸ்ரீ வித்யாவிடம் இருந்துதான்.
ஸ்ரீ வித்யாவின் அந்த பொன்னான வாக்கியம் பலித்தது. ரஜினி ஸ்டார் ஆனார், சூப்பர் ஸ்டார் ஆனார், மெகா ஸ்டார் ஆனார், தற்பொழுது எந்திரன் என்னும் திரைப்படத்தின் மூலம் இண்டெர்நேஷனல் ஸ்டார் ஆகிவிட்டார்.
தன்னுடைய பேரின் மூலம் மட்டுமே, தனது தயாரிப்பாளர்களுக்கு பொன்னோடு, சொர்கத்தினையும் பரிசளிக்க வல்ல இந்த மா மனிதன், சொட்டை தலையோடும் நரைத்த முடியோடும் வெளியே வரும் தைரியம் படைத்தவன். சாதாரன மனிதர்களின் ஒரே சூப்பர் ஸ்டார்.
Sri Raghavendrar M 640x407  “ஒரு சாமான்ய நடிகன் இந்திய திரையுலகின் சக்ரவர்த்தியான அதிசயம்!” பிரபல மலையாள நாளிதழில் வெளியான முழுபக்க கட்டுரை!
கடந்த கால நண்பர்களை இன்னும் அன்பொழுக நட்பு பாராட்டும், இறைவனின் பாதங்களில் தன்னை சமர்ப்பித்து அதன் மூலம் தான் யார் என்று அரிய முயலும், மராட்டியரான பஸ் கண்டக்டர் சிவாஜி ராவ் என்னும் ரஜினிகாந்த்,  ஒருமுறை என்னிடம் கூறிய வார்தைகளை உபயோகித்து நான் அவரை வர்ணிக்க வேண்டுமானால் ‘காமிராவுக்கு முன் ஹீரோ, காமிராவிற்க்குப் பின் (கடவுளின் முன்னால்) ஸீரோ’
ஒருமுறை நான் சிவாஜி ராவிடம் விளையாட்டாக “நீங்கள் மலையாளத்தில் நடிக்க விரும்புகிறீர்களே, அங்கு ப்ரேம்நசீர், மது என்னும் மிகப் பெரிய போர்க்குதிரைகள் களத்தில் உள்ள போது சிவாஜி ராவ் ஜெயிக்க முடியுமா?” என்று கேட்டேன். அதற்கு ரஜினி “நானும் ஒடுவேன், எனக்குத் தெரியும் நான் ஒரு நொண்டிக்குதிரை என்று. நொண்டிக் குதிரைகள் போர்க்குதிரைகளுடன் போட்டி போட்டு ஜெயிப்பது மிகவும் கடினம் தான், தோற்பது சகஜம் தான். ஆனால், ஒருவேளை ஜெயித்து விட மாட்டோமா என்று தான் நான் நினைக்கிறேன்….” என்றார்.
Muthu Chariot 640x483  “ஒரு சாமான்ய நடிகன் இந்திய திரையுலகின் சக்ரவர்த்தியான அதிசயம்!” பிரபல மலையாள நாளிதழில் வெளியான முழுபக்க கட்டுரை!
அந்த சிவாஜி ராவ் என்னும் நொண்டிக் குதிரை, அனைத்து போர்க்குதிரைகளையும் பின்னுக்குத் தள்ளி, இன்று தமிழகம் தாண்டி, இந்தியா கடந்து, பரந்து விரிந்த இந்த உலகமெங்கும், எந்திரன் என்னும் திரைப்படத்தின் மூலமாக, மிக சக்திவாய்ந்த ராஜ கம்பீர குதிரையாக வெற்றிக்களிப்பில் ஒடிக்கொண்டு இருக்கிறது. சினிமா என்பது மக்களை ஆளும் ஒரு ரஜ்ஜியம் என்றால், ரஜினிகாந்த் இந்திய மக்களை அன்றே தன்வசப்படுத்திவிட்டவராவார். மேலும் தனது சினிமாக்கள் என்னும் ராஜ தந்திரத்தின் மூலம் பிற நாட்டவர்களையும் தம் ஆளுகையில் கொண்டுவரும் பேரரசராக விளங்குகிறார்.
எந்திரன் நல்ல படமோ, கெட்ட படமோ, கமர்சியல் படமோ, ஆர்ட் படமோ, ஸயின்ஸ் ஃபிக்ஷனோ, எதுவானாலும் இந்த படத்தின் மூலமும், தனது பிற படங்களின் மூலமாகவும தீமையை நன்மை என்றும் வெல்லும் என்னும் உலக நீதியை மக்களுக்கு பறைசாற்றுகிறார். ரசிகர்களாகிய நம்மை எல்லாம் ஆனந்தக்கடலில் ஆழ்த்துகிறார், நம் மனதில் நன்மையை நிலைநாட்டுகிறார். நாம் அவரை கைதட்டி, உற்சாகப் படுத்தி, அமர்களமாக வரவேற்போமாக!
இந்த கட்டுரையில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளும் என் மனதில் இருந்து எழுந்தவை. ஒரு தடவை கூட (வெளியாவதற்கு முன்) இந்த கட்டுரையைப் பற்றி ரஜினிக்கு தெரியாது. அதன் காரணமாகவே, யாருக்கும் இதில் நன்றிக்கடனும் இல்லை, யாரையும் தாழ்த்தும் என்னமும் இல்லை.
ஹ ஹா ஹா ஹா ஹா….!!!!!

Comments

Popular posts from this blog

HISTORY OF COMPUTER DATA STORAGE A STAGE BY STAGE PICTORIAL PRESENTATION

Inspired and visited Hindu temple by Me and My friends in and around Kumbakonam- Aduthurai

Gandhi Age is the Dark Age of India