Posts

Showing posts from March, 2020

சனி பிரதோஷ மகிமை

Image
பிரதோஷம் என்ற வார்த்தைக்கு என்ன பொருள்? “ப்ர” என்றால் விசேஷமானது என்று அர்த்தம். “தோஷம்” என்றால் எல்லோரும் அறிந்தது தான். உலகத்தில் உள்ள எல்லா விசேஷமான தோஷங்களையும்,  நீக்கக்கூடியது தான் இந்த பிரதோஷம். இந்த பிரதோஷ தினத்தன்று சிவனை நினைத்து வழிபட்டால் அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் என்பது தான் உண்மை. இந்தப் பிரதோஷ நாளானது ஏன் வந்தது. இந்த தினத்தில் எப்படி விரதமிருக்கலாம். மகா பிரதோஷமான சனிப்பிரதோஷத்தின் சிறப்பு என்ன என்பதைப்பற்றி காண்போமா. தேவர்கள் நரை, திரை, மூப்பு, பிணி, சாக்காடலால் மிகவும் துன்பப் பட்டார்கள். தங்கள் துன்பத்தைப் போக்கிக் கொள்ள தேவர்கள் கடவுளிடம் செல்ல வில்லை. அவர்களுக்குள்ளேயே பேசிக்கொண்டு கொண்டு ஒரு முடிவுக்கு வந்தனர். அது என்னவென்றால் “பாற்கடலை கடைந்தால் அமிர்தம் வரும். அந்த அமிர்தத்தை குடித்து தங்கள் துன்பத்தை தீர்த்துக் கொள்ளலாம்.” என்று நினைத்து பார் கடலைக் கடைய ஆரம்பித்தனர். ஆனால் பாற்கடலில் இருந்து அமிர்தம் வரவில்லை. விஷம் தான் வந்தது. (ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொள்ளும்போது தான் அந்த ஈசனின் நினைப்பு தேவர்களுக்கு வந்துள்ளது) அந்த விஷம் தேவர்களை துரத்