Posts

Showing posts from April, 2020

ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

Image
குருக்ஷேத்திரத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் ஒன்பது நாள்கள் முடிந்து விட்டன. 'ஒன்பது நாள்கள் கடந்தும் பாண்டவர்களை வீழ்த்த முடியவில்லையே!' என்று நினைத்த துரியோதனன், மகாரதராக இருந்த பீஷ்மரிடம் தான் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்து விட்டான். 'தாத்தா பீஷ்மர், பாண்டவர்களை ஒழிக்க வேண்டும் என்ற உறுதியுடன் போரிடவில்லை' என்றே நினைத்தான். தன் எண்ணத்தை மிகக் கோபத்துடன் பீஷ்மரிடமும் தெரிவித்தான். துரியோதனின் கடுமையைக் கண்ட பீஷ்மரும், அதே கடுமையுடன் மறுநாள் போரில் பாண்டவர்களை அடியோடு வீழ்த்துவதாக சபதம் செய்தார். ஆனால், துரியோதனனோ, '`பாண்டவர்களை வீழ்த்துவேன் என்று சொல்லாதீர்கள். `அவர்களைப் போரில் கொல்வேன்'' என்று சொல்லுங்கள்' என்றான். செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்க வேண்டுமே என்பதற்காக பீஷ்மரும், `"அப்படியே ஆகட்டும்'' என்று கூறிவிட்டார். அதே தருணத்தில் பாண்டவர்களின் பாசறையில் இருந்த கண்ணன் லேசாகச் சிரித்தான். அவனுடைய சிரிப்பின் காரணம் அங்கிருந்த பாண்டவர்களுக்குப் புரியவில்லை. சற்றைக்கெல்லாம், பீஷ்மர் செய்த சப

இந்து மதமும் இந்திய சுதந்திரமும்

Image
இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட வரலாறு...  மறைக்கப்பட்ட வரலாறு.... 1947 ஆகஸ்டு 15 நாம் எப்படி சுதந்திரம் பெற்றோம். மௌண்ட் பேட்டன், நேருவை அழைத்து, உங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கப் போகிறோம் அதை எப்படிக் கொடுப்பது என்று கேட்க, நேருவுக்கு குழப்பமாக இருந்தது. எதை அடையாளமாக வைத்து சுதந்திரத்தைப் பெறுவது..... (பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கியது என்பதற்கு எந்த சாசனமும் இல்லை). உடனே நேரு மூதறிஞர் ராஜாஜியை அணுகி, "எனக்கு இந்த நடைமுறைகள் தெரியாது, அதனால் தாங்கள் தான் தீர்வு கூற வேண்டும்" என்று கூற, உடனே ராஜாஜி "கவலை வேண்டாம், எங்கள் தமிழகத்தில் மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, ராஜகுருவாக இருப்பவர், செங்கோலைப் புதிய மன்னருக்குக் கொடுத்து, ஆட்சி மாற்றம் செய்வர். நாமும் அன்னியன் கையால் சுதந்திரம் பெறுவதை விட, குரு மகானின் கையால் செங்கோலைப் பெற்று ஆட்சி மாற்றம் அடையலாம்", என்றார். நேருவும் "நேரம் குறைவாக உள்ளது.. உடனே ஏற்பாட்டை செய்யுங்கள்", என்று உத்தரவிட்டார். ராஜாஜி உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டு விஷயத்த