Posts

Showing posts from 2017
தேவாங்க வம்ச வரலாறு : தேவதாசமய்யனுக்குப் பின் அவன் மகன் விருபாட்சன் ஆமோதநகரை ஆட்சி செய்தான். இவனைத் தொடர்ந்து இவன் மகன் உருத்திரனும் இவனுடைய காளசேனனும் ஆட்சிக்கு வந்தனர். காளசேனன் மக்கட்பேறு இன்றி பலநாட்டு மன்னர்களின் புதல்விகள் 10 ஆயிரம் பேரை மணந்தான். அவ்வாறு மணந்தும் மக்கட்பேறு கிட்டவில்லை. அதனால் சிவபெருமானை நோக்கித் தவஞ் செய்தான். அந்நிலையில் ஆமோதநகருக்குக் கவுதம முனிவர் வந்தார். இவர் வரவை அறிந்த காளசேன மன்னன் அவரை வரவழைத்து உபசரித்துக் குழந்தையில்லாக் குறையைக் கூறினான். அதுகேட்டு முனிவர் புத்திரகாமேட்டி யாகம் செய்தால் குழந்தைப்பேறு உண்டாகும் என்று சொல்லி யாகத்தையும் செய்து முடித்தார். அதில் அமிர்தம் வந்தது. அதைப்பெற்று மன்னன் தன் மனைவியர் 10000 பேருக்கும் பகிர்ந்து அளித்தான். அமிர்தம் அருந்திய அரசிகள் யாவரும் கருவுற்று உரியகாலத்தில் 10000 மக்களை ஈன்றனர். இவர்கள் யாவரும் சிங்கக் குட்டிகளென வளர்ந்தனர். உரியபருவத்தில் சகல சடங்குகளும் செய்யப்பெற்று 700 முனிவர்கள் பால் சிவதீட்சை பெற்றனர். தீட்சை அளித்த முனிவர்களின் வழி 700 கோத்திரங்கள் ஏற்பட்டன. 10000 பிள்ளைகளும் திருமணம் செய்து கொ
தேவாங்க குல  புராணம் தேவலர் தோற்றம் : மறைமுடிவாய் விளங்கும் சிவபெருமானின் புகழெலாம் திரண்டு ஒன்றாகி, அடியவர்கள் விரும்பும் வீடுபேற்றை அருளும் திருக்கயிலை ஒளிபெற்று விளங்கியது. இதில் கோடி சூரியப் பிரகாசமாய்ப் பொன்னாலும் மணியாலும் ஆன அரியாசனத்தில் அம்மை அப்பர் கொலு வீற்றிருந்தனர். அப்போது தேவர், அசுரர், கந்தருவர் வித்தியாதரர் கின்னரர் இயக்கர் முனிவர் சித்தர் நாகர் கிம்புருடர் முதலியோர் சூழ்ந்திருந்து பெருமானைப் போற்றி இசைத்த புகழ் ஒலி எங்கும் பரவ ஒலித்துக் கொண்டிருந்தது. முற்றுந் துறந்த முனிவர்கள் பலர் ஐம்புலனும் அகத்தடக்கி ஆங்காங்கு அமர்ந்து தவஞ்செய்து கொண்டிருந்தனர். படிவோர் பாவங்களை அறவே அறுக்கும் புண்ணிய தீர்த்தங்களும், அழகிய மலர் வாவிகளும் நிரம்பி இருந்தன. இவற்றின் இடையே முனிவர்கள் நீராடித் தவஞ் செய்வதற்கேற்ற புஷ்கரதீர்த்தம் என்னும் சுனை இருந்தது. நித்திய கருமங்களை முடித்துக்கொண்டு நைமிசாரண்ய முனிவர்கள் சுனையின் கரைமீது அமர்ந்திருந்தனர். அப்போது அங்கே சூத முனிவர் வந்தார். வந்தவரை முனிவர்கள்வரவேற்று உபசரித்து. அவரிடம் பிரம்மாண்ட புராணத்தில் உள்ள தேவாங்க முனிவரின் பு