Posts

ஹிந்து மதமும்; காக்கைகளின் அறியாமையும்!-ப.லட்சுமி, எழுத்தாளர்

Image
  'கேனப் பைய ஊருல கிறுக்குப் பய நாட்டாமை' என்று கிராமப்புறங்களில் ஒரு சொலவடை சொல்வர். அதுபோல இருக்கு தமிழகத்தின் இன்றைய நிலைமை! சில நாட்களுக்கு முன் இயக்குனர் வெற்றி மாறன், 'திருவள்ளுவருக்கு காவி அணிவித்தது போல், ராஜராஜ சோழனை ஹிந்துவாய் காட்சிப்படுத்தியுள்ளனர்...' என்று திருவாய் மலர்ந்தார். உடனே, 'ஆமாஞ்சாமி... நானும் அரசியலில் உள்ளேன் சாமி...' என்று, 'அட்டடென்ஸ்' போடும் வகையில், சைமன் செபாஸ்டியன் என்ற சீமான், 'ஆமா... திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசியது போல், எங்க முப்பாட்டன் ராஜராஜ சோழனை ஹிந்துவாக காட்ட முயற்சிக்கின்றனர்...' என்றிருக்கிறார். நடிகர் கமல்ஹாசனோ, 'ராஜராஜ சோழன் காலத்தில் ஹிந்து மதமே இல்லை...' என்று கூறியுள்ளார். அப்படியானால், 1969க்கு முன் வரை தமிழ்நாடு என்று ஒரு நாடே கிடையாது... சோழ நாடு, பாண்டிய, பல்லவ நாடு, சேர நாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு, நாஞ்சில் நாடு என்று தான் இருந்தன. இங்கு யார் ஹிந்து? அதற்காக, இப்போதும் வெற்றிமாறன், சீமான், திருமாவளவன், கமல்ஹாசன் போன்றோர், பொதுவெளியில் தங்களை கொங்கு நாட்டவன், நாஞ்சில் நாட்டவன்,

ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

Image
குருக்ஷேத்திரத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் ஒன்பது நாள்கள் முடிந்து விட்டன. 'ஒன்பது நாள்கள் கடந்தும் பாண்டவர்களை வீழ்த்த முடியவில்லையே!' என்று நினைத்த துரியோதனன், மகாரதராக இருந்த பீஷ்மரிடம் தான் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்து விட்டான். 'தாத்தா பீஷ்மர், பாண்டவர்களை ஒழிக்க வேண்டும் என்ற உறுதியுடன் போரிடவில்லை' என்றே நினைத்தான். தன் எண்ணத்தை மிகக் கோபத்துடன் பீஷ்மரிடமும் தெரிவித்தான். துரியோதனின் கடுமையைக் கண்ட பீஷ்மரும், அதே கடுமையுடன் மறுநாள் போரில் பாண்டவர்களை அடியோடு வீழ்த்துவதாக சபதம் செய்தார். ஆனால், துரியோதனனோ, '`பாண்டவர்களை வீழ்த்துவேன் என்று சொல்லாதீர்கள். `அவர்களைப் போரில் கொல்வேன்'' என்று சொல்லுங்கள்' என்றான். செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்க வேண்டுமே என்பதற்காக பீஷ்மரும், `"அப்படியே ஆகட்டும்'' என்று கூறிவிட்டார். அதே தருணத்தில் பாண்டவர்களின் பாசறையில் இருந்த கண்ணன் லேசாகச் சிரித்தான். அவனுடைய சிரிப்பின் காரணம் அங்கிருந்த பாண்டவர்களுக்குப் புரியவில்லை. சற்றைக்கெல்லாம், பீஷ்மர் செய்த சப

இந்து மதமும் இந்திய சுதந்திரமும்

Image
இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட வரலாறு...  மறைக்கப்பட்ட வரலாறு.... 1947 ஆகஸ்டு 15 நாம் எப்படி சுதந்திரம் பெற்றோம். மௌண்ட் பேட்டன், நேருவை அழைத்து, உங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கப் போகிறோம் அதை எப்படிக் கொடுப்பது என்று கேட்க, நேருவுக்கு குழப்பமாக இருந்தது. எதை அடையாளமாக வைத்து சுதந்திரத்தைப் பெறுவது..... (பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கியது என்பதற்கு எந்த சாசனமும் இல்லை). உடனே நேரு மூதறிஞர் ராஜாஜியை அணுகி, "எனக்கு இந்த நடைமுறைகள் தெரியாது, அதனால் தாங்கள் தான் தீர்வு கூற வேண்டும்" என்று கூற, உடனே ராஜாஜி "கவலை வேண்டாம், எங்கள் தமிழகத்தில் மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, ராஜகுருவாக இருப்பவர், செங்கோலைப் புதிய மன்னருக்குக் கொடுத்து, ஆட்சி மாற்றம் செய்வர். நாமும் அன்னியன் கையால் சுதந்திரம் பெறுவதை விட, குரு மகானின் கையால் செங்கோலைப் பெற்று ஆட்சி மாற்றம் அடையலாம்", என்றார். நேருவும் "நேரம் குறைவாக உள்ளது.. உடனே ஏற்பாட்டை செய்யுங்கள்", என்று உத்தரவிட்டார். ராஜாஜி உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டு விஷயத்த

சனி பிரதோஷ மகிமை

Image
பிரதோஷம் என்ற வார்த்தைக்கு என்ன பொருள்? “ப்ர” என்றால் விசேஷமானது என்று அர்த்தம். “தோஷம்” என்றால் எல்லோரும் அறிந்தது தான். உலகத்தில் உள்ள எல்லா விசேஷமான தோஷங்களையும்,  நீக்கக்கூடியது தான் இந்த பிரதோஷம். இந்த பிரதோஷ தினத்தன்று சிவனை நினைத்து வழிபட்டால் அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் என்பது தான் உண்மை. இந்தப் பிரதோஷ நாளானது ஏன் வந்தது. இந்த தினத்தில் எப்படி விரதமிருக்கலாம். மகா பிரதோஷமான சனிப்பிரதோஷத்தின் சிறப்பு என்ன என்பதைப்பற்றி காண்போமா. தேவர்கள் நரை, திரை, மூப்பு, பிணி, சாக்காடலால் மிகவும் துன்பப் பட்டார்கள். தங்கள் துன்பத்தைப் போக்கிக் கொள்ள தேவர்கள் கடவுளிடம் செல்ல வில்லை. அவர்களுக்குள்ளேயே பேசிக்கொண்டு கொண்டு ஒரு முடிவுக்கு வந்தனர். அது என்னவென்றால் “பாற்கடலை கடைந்தால் அமிர்தம் வரும். அந்த அமிர்தத்தை குடித்து தங்கள் துன்பத்தை தீர்த்துக் கொள்ளலாம்.” என்று நினைத்து பார் கடலைக் கடைய ஆரம்பித்தனர். ஆனால் பாற்கடலில் இருந்து அமிர்தம் வரவில்லை. விஷம் தான் வந்தது. (ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொள்ளும்போது தான் அந்த ஈசனின் நினைப்பு தேவர்களுக்கு வந்துள்ளது) அந்த விஷம் தேவர்களை துரத்
தேவாங்க வம்ச வரலாறு : தேவதாசமய்யனுக்குப் பின் அவன் மகன் விருபாட்சன் ஆமோதநகரை ஆட்சி செய்தான். இவனைத் தொடர்ந்து இவன் மகன் உருத்திரனும் இவனுடைய காளசேனனும் ஆட்சிக்கு வந்தனர். காளசேனன் மக்கட்பேறு இன்றி பலநாட்டு மன்னர்களின் புதல்விகள் 10 ஆயிரம் பேரை மணந்தான். அவ்வாறு மணந்தும் மக்கட்பேறு கிட்டவில்லை. அதனால் சிவபெருமானை நோக்கித் தவஞ் செய்தான். அந்நிலையில் ஆமோதநகருக்குக் கவுதம முனிவர் வந்தார். இவர் வரவை அறிந்த காளசேன மன்னன் அவரை வரவழைத்து உபசரித்துக் குழந்தையில்லாக் குறையைக் கூறினான். அதுகேட்டு முனிவர் புத்திரகாமேட்டி யாகம் செய்தால் குழந்தைப்பேறு உண்டாகும் என்று சொல்லி யாகத்தையும் செய்து முடித்தார். அதில் அமிர்தம் வந்தது. அதைப்பெற்று மன்னன் தன் மனைவியர் 10000 பேருக்கும் பகிர்ந்து அளித்தான். அமிர்தம் அருந்திய அரசிகள் யாவரும் கருவுற்று உரியகாலத்தில் 10000 மக்களை ஈன்றனர். இவர்கள் யாவரும் சிங்கக் குட்டிகளென வளர்ந்தனர். உரியபருவத்தில் சகல சடங்குகளும் செய்யப்பெற்று 700 முனிவர்கள் பால் சிவதீட்சை பெற்றனர். தீட்சை அளித்த முனிவர்களின் வழி 700 கோத்திரங்கள் ஏற்பட்டன. 10000 பிள்ளைகளும் திருமணம் செய்து கொ
தேவாங்க குல  புராணம் தேவலர் தோற்றம் : மறைமுடிவாய் விளங்கும் சிவபெருமானின் புகழெலாம் திரண்டு ஒன்றாகி, அடியவர்கள் விரும்பும் வீடுபேற்றை அருளும் திருக்கயிலை ஒளிபெற்று விளங்கியது. இதில் கோடி சூரியப் பிரகாசமாய்ப் பொன்னாலும் மணியாலும் ஆன அரியாசனத்தில் அம்மை அப்பர் கொலு வீற்றிருந்தனர். அப்போது தேவர், அசுரர், கந்தருவர் வித்தியாதரர் கின்னரர் இயக்கர் முனிவர் சித்தர் நாகர் கிம்புருடர் முதலியோர் சூழ்ந்திருந்து பெருமானைப் போற்றி இசைத்த புகழ் ஒலி எங்கும் பரவ ஒலித்துக் கொண்டிருந்தது. முற்றுந் துறந்த முனிவர்கள் பலர் ஐம்புலனும் அகத்தடக்கி ஆங்காங்கு அமர்ந்து தவஞ்செய்து கொண்டிருந்தனர். படிவோர் பாவங்களை அறவே அறுக்கும் புண்ணிய தீர்த்தங்களும், அழகிய மலர் வாவிகளும் நிரம்பி இருந்தன. இவற்றின் இடையே முனிவர்கள் நீராடித் தவஞ் செய்வதற்கேற்ற புஷ்கரதீர்த்தம் என்னும் சுனை இருந்தது. நித்திய கருமங்களை முடித்துக்கொண்டு நைமிசாரண்ய முனிவர்கள் சுனையின் கரைமீது அமர்ந்திருந்தனர். அப்போது அங்கே சூத முனிவர் வந்தார். வந்தவரை முனிவர்கள்வரவேற்று உபசரித்து. அவரிடம் பிரம்மாண்ட புராணத்தில் உள்ள தேவாங்க முனிவரின் பு